நடைபெறவுள்ள ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான பொலிஸ் திணை;களத்திற்கு 230 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் வழங்கியுள்ள இந் நிதியினைக் கொண்டு விசேட ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு பொலிஸாரினால் இப்பணிகள் நாடு முழுவதும் துரித கதியில் நடாத்தப்பட்டு வருகின்றது.
மேலும் சட்டவிதிமுறைகளை மீறி வீதிகள், பொது இடங்களில் துண்டுப்பிரசுரங்களை ஒட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Post a Comment