பாலியல் தொந்தரவை வெளியிட்டால் எதிர்காலம் வீணாகிவிடும்! - Yarl Voice பாலியல் தொந்தரவை வெளியிட்டால் எதிர்காலம் வீணாகிவிடும்! - Yarl Voice

பாலியல் தொந்தரவை வெளியிட்டால் எதிர்காலம் வீணாகிவிடும்!

அக்‌ஷய் குமார்- ராதிகா ஆப்தே நடித்துள்ள ‘பேட்மேன்’ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு படத்தின் நடிகை ராதிகா ஆப்தே கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன் போதே அவர் பாலியல் தொல்லை தெடர்பில் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பாலியல் தொல்லை பற்றி நடிகைகள் யாரும் தைரியமாக பேசுவது இல்லை. அப்படி பேசினால் அவர்களுடைய எதிர்காலம் நாசமாகிவிடும். அவர்களுடைய திரை உலக கனவு, கனவாகவே முடிந்துவிடும். இதனால் தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை.

பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பேச வேண்டும். பேசினால் மட்டும் போதாது. வற்புறுத்தல் வரும்போது முடியாது என்றும் கூற வேண்டும். இல்லை யென்றால், அதை நிறுத்த முடியாது. பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசுவோருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

இந்த மாற்றம் உடனே நடந்துவிடாது. மாற்றம் ஏற்பட மக்களுக்கு தைரியம் வர வேண்டும். எனக்கு மோசமான பாலியல் தொந்தரவு அனுபவம் எதுவும் இல்லை.

எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள் பற்றி ஏற்கனவே பேசிவிட்டேன். நான் எதையும் மறைப்பது இல்லை. அதே வேளை, மற்றவர்களின் பாலியல் தொல்லை விவகாரம் பற்றியும் பேசமாட்டேன்” என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post