ரூ.11,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி யார்? - Yarl Voice ரூ.11,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி யார்? - Yarl Voice

ரூ.11,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி யார்?

ரூ.11,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி யார்?
ரூ.11,500 கோடி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நீரவ் மோடி யார்?
நீரவ் மோடி. கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் அனைத்து மீடியாக்களிலும் அடிபடும் பெயர்.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற  ரூ.11,500 கோடி ஊழலில் முக்கிய குற்றவாளியாக தற்போது தேடப்பட்டு வருகிறார். சாதாரண வைர வியாபாரியாக இருந்த நீரவ் மோடி இவ்வளவு பெரிய ஊழல் வழக்கில் சிக்கியது எப்படி? இவருடைய பின்னணி என்ன?

பெல்ஜியத்தில் வளர்ந்த நீரவ் மோடி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியாவுக்கு வந்து தனது தந்தையின் தொழிலான வைர வியாபாரத்தையே மேற்கொண்டார். இவரது மாமா மூலம் வைர வியாபாரம் குறித்து கற்றுக்கொண்டார். பின்பு சொந்தமாக 1999-ம் ஆண்டு பையர்ஸ்டார் டையமண்ட் என்ற நிறுவனத்தை குஜராத்தில் தொடங்கினார். ஆனால் மற்றவர்களை போல் சாதாரண வைர வியாபாரியாக இருந்து விடாமல் தனது தயாரிப்புகளை  சர்வதேச அளவுக்கு எடுத்துச் சென்றதுதான் இவரது வெற்றி என்கின்றனர். இவரது வைர நகை தயாரிப்புகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 கோடி வரைக்கு விற்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஆண்ட்ரியா டயாகோனு, கேத் வின்சிலட் போன்றவர்கள் இவரது நிறுவனத்தின் வைர மாடல்களை புரமோட் செய்துள்ளனர். குஜராத் மட்டுமல்லாமல் டெல்லி, மும்பை, நியூயார்க், லண்டன், ஹாங்காங், மக்காவு  உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் இவரது கடைகள் உள்ளன.

2015-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள மேடிசன் அவுன்யூவில் உள்ள கடையை தற்போதையை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைத்தார். 2017-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியலில் 57-வது இடத்தை பிடித்தவர். இவரின் மொத்த சொத்து மதிப்பு 173 கோடி டாலர். சர்வதேச பொருளாதார கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post