நைஜீரியா சாலை விபத்தில் 22 மாணவர்கள் பலி! - Yarl Voice நைஜீரியா சாலை விபத்தில் 22 மாணவர்கள் பலி! - Yarl Voice

நைஜீரியா சாலை விபத்தில் 22 மாணவர்கள் பலி!

நைஜீரியா சாலை விபத்தில் 22 மாணவர்கள் பலி!
நைஜீரியா சாலை விபத்தில் 22 மாணவர்கள் பலி!
நைஜீரியா-வில் பள்ளி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 22 மாணவர்கள் பலியாகியுள்ளனர்!

வடக்கு நைஜீரியாவின் கனோ-வில் பள்ளி வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில், வாகன ஓட்டுநர் மற்றும் மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 23 பேர் இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்கள் பவுட்சி மாநிலத்தில் உள்ள பொதுப் பள்ளி மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சாலையில் இருந்த பள்ளத்தில் வானகத்தினை செலுத்தியதால் வாகன ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டினை இழந்துள்ளார்.

நிலைதடுமாறிய பேருந்து விபத்துக்குள்ளானதில், 23 பேர் பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்!

0/Post a Comment/Comments

Previous Post Next Post