22 மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தலா? - Yarl Voice 22 மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தலா? - Yarl Voice

22 மாலுமிகளுடன் கப்பல் மாயம்: கடற்கொள்ளையர்கள் கடத்தலா?

மேற்கு ஆப்பிரிக்க கடற்பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மூன்று நாட்களாக மாயமாகியுள்ளதால், கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் ஆங்கிலோ ஈஸ்டர்ன் என்ற கம்பெனிக்கு சொந்தமான ஆவு ஆயசiநெ நுஒpசநளள என்ற கப்பல் 8.1 மில்லியன் டொலர் மதிப்பிலான பெற்றோலுடன் மாயமாகியுள்ளது.

மாயமாகி 3 நாட்கள் கடந்த பின்னரும் இதுவரை எந்த தகவலும் இல்லாத நிலையில், குறித்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

மாயமாகிய கப்பலில் 22 இந்தியர்கள் பணியாற்றி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் பலர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இறுதியாக குறித்த கப்பலில் இருந்து கடந்த மாதம் 31 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தகவல் பரிமாறப்பட்டுள்ளது.

மாயமான கப்பல் தொடர்பில் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள எஞ்சிய கப்பல்களுக்கும் தகவல் பகிரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாயமானவர்களின் குடும்பத்திடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பே முதன்மையான பணி என ஆங்கிலோ ஈஸ்டர்ன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post