ஊழல் நாடுகளின் பட்டியலில் 81-ஆவது இடத்தில் இந்தியா - Yarl Voice ஊழல் நாடுகளின் பட்டியலில் 81-ஆவது இடத்தில் இந்தியா - Yarl Voice

ஊழல் நாடுகளின் பட்டியலில் 81-ஆவது இடத்தில் இந்தியா

ஊழல் நாடுகளின் பட்டியலில் 81-ஆவது இடத்தில் இந்தியா
ஊழல் நாடுகளின் பட்டியலில் 81-ஆவது இடத்தில் இந்தியா
உலக அளவில், ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல்’ என்னும் அமைப்பு கடந்த ஆண்டு உலக அளவில் ஊழல் நிறைந்த  நாடுகளின் பட்டியலை தயாரித்தது. 180 நாடுகள் கொண்ட அப்பட்டியலில்  இந்தியா 81-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதேபோல், கடந்த 2016-இல் 176 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 79-ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 180 நாடுகள் பட்டியலில், ஊழல் குறைவாக உள்ள முதல் நாடு என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது. 2-ஆவது இடத்தில் டென்மார்க் நாடும், 3-ஆவது இடத்தில் ஃபின்லாந்து, நார்வே, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

பட்டியலில் சீனா 77-ஆவது இடத்திலும், ரஷ்யா 135-ஆவது இடத்திலும் உள்ளன. ஊழல் மிகுந்த நாடுகளாக சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

பட்டியலில் ஊழல் மட்டுமல்லாது, வேறு சில காரணிகளும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக ஆசிய பசிபிக் பகுதியிலுள்ள சில நாடுகளில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மீதான அச்சுறுத்தல்கள்,  தாக்குதல்கள் உள்ளிட்டவையும் இதில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. சில சமயம் இந்த தாக்குதல்கள் கொலையில் முடிவடைந்துள்ளன.

பிலிப்பைன்ஸ், இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் ஊழல் அதிகமாகவும், பத்திரிகை சுதந்திரம் குறைவாகவும் உள்ளன. இந்த நாடுகளில் கடந்த 6 ஆண்டுகளில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post