ஆணின் சடலம் மீட்பு - Yarl Voice ஆணின் சடலம் மீட்பு - Yarl Voice

ஆணின் சடலம் மீட்பு

தம்புள்ளை கல்வெடியாவ பகுதியில் வீட்டின் பின்னால் இருந்த பாழடைந்த கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப் பகுதியினைச் சேர்ந்த 52 வயதுடைய எம். விஜயரத்ன பண்டா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது மூத்த மகளுடைய வீட்டிற்கு தனது மனைவியை தேடி வந்த குறித்த நபர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்புவதாக தெரிவித்து சென்றவர் அவருடைய வீட்டிற்கும் செல்லாத நிலையில், தகவல்கள் எதுவும் இன்றி தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் வீடொன்றின் பின்னால் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post