பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தம்-மீறினால் சட்டம் பாயும் - Yarl Voice பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தம்-மீறினால் சட்டம் பாயும் - Yarl Voice

பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தம்-மீறினால் சட்டம் பாயும்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நேற்று  நள்ளிரவுடன் நிறைவடைவதாகவும், அதன்படி எந்தவொரு தேர்தல்கள் பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

வாக்காளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், அந்த நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேவேளை இந்தக் காலத்தில் செயற்பட வேண்டிய முறை குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளுக்காக 65,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post