பிரியா வாரியருக்கு எதிரான வழக்கு இடைக்காலத் தடை- உச்ச நீதிமன்றம் - Yarl Voice பிரியா வாரியருக்கு எதிரான வழக்கு இடைக்காலத் தடை- உச்ச நீதிமன்றம் - Yarl Voice

பிரியா வாரியருக்கு எதிரான வழக்கு இடைக்காலத் தடை- உச்ச நீதிமன்றம்

பிரியா வாரியருக்கு எதிரான வழக்கு இடைக்காலத் தடை- உச்ச நீதிமன்றம்
பிரியா வாரியருக்கு எதிரான வழக்கு இடைக்காலத் தடை- உச்ச நீதிமன்றம்
மலையாள நடிகையான பிரியா பிரகாஷ் வாரியர் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைகாலத் தடையை பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் வரவேற்றுள்ளார்.

இயக்குனர் ஓமார் லுலு இயக்கிய ஒரு அடார் லவ் திரைபடத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலில் நடித்திருந்த நடிகையான பிரியா வாரியர் தனது முக பாவனையாலும், கண் அசைவுகளாலும் ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

இந்திலையில், இந்த பாடலில் இடம் வரிகள் இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி பட இயக்குநர் ஓமர் மீதும், நடிகை பிரியா வாரியர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து நடிகை பிரியா வாரியர் மற்றும்  இயக்குனர் ஓமாரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நேற்று விசாரணை செய்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்க உத்தரவிட்டது.மேலும் நடிகை பிரியா வாரியர் இது தனக்கு திரை வாழ்கையில் புதிய அனுபவம் என்றும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்கிறேன் என்றும் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post