யாழ்.மாநகர சபையில் ஆட்சி அமைப்க த.தே.கூ - ஈ.பி.டி.பி பேச்சு - Yarl Voice யாழ்.மாநகர சபையில் ஆட்சி அமைப்க த.தே.கூ - ஈ.பி.டி.பி பேச்சு - Yarl Voice

யாழ்.மாநகர சபையில் ஆட்சி அமைப்க த.தே.கூ - ஈ.பி.டி.பி பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பு- ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து யாழ்.மாநகரசபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி ஆதிகார சபைகளுக்கான தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களிலும் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் பெற்றி பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் யாழ்.மாநகரசபையில் 16 ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளபோதும் ஆட்சியமைக்க முடியாத நிலைய காணப்படுகின்றது.

இதனால் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுக் களை தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று தொடுத்திருந்தது.

ஆனாலும் அவ்வாறான கூட்டுக்கு சாத்தியமே இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்ன ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இந்நிலையில் 10 ஆசனங்களை பெற்றிருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து மாநகரசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கிறது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக ஈ.ப.டி.பி வட்டாரங்கள் கூறுகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் இருந்து நேரடியாக அழைப்பு வரவில்லை.

ஆனாலும் வேறு சிலர் ஊடாக அவ்வாறான பேச்சு வந்துள்ளதாகவும், இறுதி தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post