பாஜக போல காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்காது- ராகுல் காந்தி - Yarl Voice பாஜக போல காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்காது- ராகுல் காந்தி - Yarl Voice

பாஜக போல காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்காது- ராகுல் காந்தி

பாஜக போல காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்காது- ராகுல் காந்தி
பாஜக போல காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளிக்காது- ராகுல் காந்தி
திரிபுராவின் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் உரையாற்றிய அவர்,பா.ஜ.க, சிபிஐ (எம்) கட்சிகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எந்த கவனமும் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.

திரிபுராவில், மகாத்மா காந்தி ஊரக வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் ரூ 340 சம்பளமாக தருவதாக உறுதியளித்திருக்கிறது. ஆனால் அப்படி உறுதியளிக்கப்பட்ட அஸ்ஸாமில் ரூ 184ஐ மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்படித்தான் பாஜக எப்போதும் நிறவிவேற்ற முடியாத பெரிய பெரிய வாக்குறுதிகளை தான் சொல்கிறது.

ராஃபேல் விமானம் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திலிருந்து ஒப்பந்தத்தை கையகப்படுத்தி, தனது நண்பர்களில் ஒருவருக்கு வழங்கி மோசடி செய்ததாகவும் அந்த ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை குறித்து கேட்டபோது, பிரதமரிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை என உனக்கோட்டி தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

திரிபுராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், தற்கொலை எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டதாகவும், சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை எனவும் மாநிலத்தில் பல்வேறு சிட்ஃபண்ட் நிதி நிறுவனங்களால் 14 லட்சம் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏமாற்றப்பட்ட நிதிகளை அரசு திருப்பியளித்து குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு பல்வேறு சூழல்களில் சிபிஐம் ஆட்சியில் திருபுரா பின்தங்கிவிட்டதாக கூறினார்.

பணமதிப்பு இழப்பாலும் ஜிஎஸ்ட்டியாலும் நாட்டுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர் 2019ல் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என உறுதியளித்தார்.

“அளிக்கப்படும் வாக்குறுதிகளை காங்கிரஸ் செயல்படுத்துகிறது. பாஜக போல  செயல்படுத்த முடியாத பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்காது.ஆட்சி அமைக்கும்போது உறுதியளிக்கிற வாக்குறிதிகளை   நிறைவேற்றுவோம்”இவ்வாறு அவர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post