மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்! - Yarl Voice மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்! - Yarl Voice

மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்!

மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்!
மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்!
மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பது குறித்து வலி மேற்கு சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் செயற்பட்டுவரும் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பதற்கு ஏதுவாக வட மாகாணத்தில் செயற்பட்டு வரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தும் செயற்திட்டத்திற்கமைய முதற்கட்டமாக இக் கலந்துரையால் நடைத்தப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 5 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு சுழற்சி முறைக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக நிதி உதவி வழங்குவதாக அமைச்சர் அன்நதி சசிதரன் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறான திட்டத்தை ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுடனான கலந்துரையாடலுக்கு அமைய நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post