தவான் அதிரடி, புவி வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா... - Yarl Voice தவான் அதிரடி, புவி வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா... - Yarl Voice

தவான் அதிரடி, புவி வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா...

தவான் அதிரடி, புவி வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா...
தவான் அதிரடி, புவி வேகத்தில் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மாவும், தவான் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 9 பந்தில் 21 ரன்கள் அடித்து அவுட்டனார். அடுத்தடுத்து களமிறங்கிய ரெய்னா, விராட் கோலியும் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுபுறம் நிதானமாக விளையாடிய தவான், 39 பந்தில் 10 பவுண்டரிகள், 2 சிக்சருடன் 72 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை குவித்தது.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார். அதேசமயம் மறுபுறம் ஸ்மட்ஸ், டுமினி, மில்லர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த புவனேஷ்குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கெனவே ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில், 20 ஓவர் கிரிக்கெட் தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான அடுத்த போட்டி வரும் 21ம் தேதி செஞ்சூரியனில் நடைபெற உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post