கட்சிகளிடையே அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- - Yarl Voice கட்சிகளிடையே அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- - Yarl Voice

கட்சிகளிடையே அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-ற்றுமைக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். அர்த்தமில்லாமல் உருவாக்கப்படும் ஒற்றுமை அது ஒற்றுமையாக இருக்காது. அவ்வாறான ஒற்றுமை எமக்கு தேவையும் இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணையவேண் டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக ஊடகங்களுக்கு பதிலளிக் கும்போதே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் தம்மை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருக்கும் கட்சியாக அடையாளப்படுத்துவது விந்தையானது. மேலும் தமிழ்தேசி யத்தின் பெயரால் கடந்த 8 வருடங்களாக தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது?

தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளையே செய்தது. எனவே தாம் செய்தவற்றை மறைக்கும் நோக்கிலான கருத்தாகவும் இந்த கருத்து அமைந்திருக்கிறது. அதேபோல் நாம் தமிழ்தேசிய கூட்டமை ப்புக்கும், அதன் அங்கத்துவ கட்சிகளுக்கும் எதிரானவர்கள் அல்ல.

ஆனால் கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஆணை கேட்டபோது அத னை ஆமோதித்தவர்கள். இப்போது தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டு ம் என கேட்பது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை.

ஆகவே ஒற்றுமைக்கும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். அர்த்தமில்லாத ஒற்றுமை தேவையில்லை. ஆ னால் உள்ளுராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆட்சியமைக்கவும், அவர் களுடைய மக்கள் நலன்சார் செயற்பாடுகளுக்கும் நாம் தடையாக இருக்கமாட்டோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post