அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு -மானிப்பாயில் சம்பவம்- - Yarl Voice அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு -மானிப்பாயில் சம்பவம்- - Yarl Voice

அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு -மானிப்பாயில் சம்பவம்-

மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அப் பகுதியினைச் சேர்ந்த தர்மலிங்கம் இரத்தினவதி (வயது 76) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவாகள் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். இதன் போது மூதாட்டி சடலமாக காணப்பட்டதுடன், அழுகிய நிலையில் இருந்துள்ளது.

தனிமையில் வசித்து வந்த நிலையில் இந்த மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கொலையா? என்பது தொடர்பில் புலண்விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post