காணொளியை மாத்திரம் வைத்துக் கொண்டு பதவியில் இருந்து நீக்க முடியாது - Yarl Voice காணொளியை மாத்திரம் வைத்துக் கொண்டு பதவியில் இருந்து நீக்க முடியாது - Yarl Voice

காணொளியை மாத்திரம் வைத்துக் கொண்டு பதவியில் இருந்து நீக்க முடியாது

ஒரு காணொளியை மாத்திரம் வைத்துக் கொண்டு, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.


லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துமாறு வெளிவிவகார அமைச்சு, லண்டனில் உள்ள தூதரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.


இந்த உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரத்துச் செய்துள்ளதுடன், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,


“வெறுமனே சமூக வலைத்தள காணொளி ஒன்றின் அடிப்படையில் அவர்கள், அதிகாரிகளை நீக்க முடியாது. விசாரணைகள் மட்டுமே முடிவு செய்யும்.


வெளிவிவகார அமைச்சும், இலங்கை தூதரகமும் விசாரணைகளை நடத்தும்.


பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கேணலாக இருந்த போது, மனிதாபிமானப் போர் நடவடிக்கையில் 11 ஆவது கெமுனு காவல்படையின் கட்டளை அதிகாரியாக, முல்லைத்தீவின் பல கிராமங்களை மீட்டு, மகத்தான சேவை ஆற்றியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post