
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை ராஜனாம செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசாரார் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் சபாநாயகர் கருஜயசூரியவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் சபாநாயகர் கருஜயசூரியவும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அங்கீகாரமின்றி பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என அறிவித்துள்ளனர்.
Post a Comment