மஹிந்தவும் வாக்களித்தார் - Yarl Voice மஹிந்தவும் வாக்களித்தார் - Yarl Voice

மஹிந்தவும் வாக்களித்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ மஹா வித்தியாலத்தில் இன்று வாக்களிப்பில் ஈடுபட்டார்.

2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்லில், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 443 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றன.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறுமாயின்இ நல்லாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில்இ இன்று மும்முரமாக வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான உள்ளூர் அதிகார சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றுமாயின் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதாக கூட்டு எதிரணி சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்இ தற்போதைய ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி இணைந்த கூட்டு ஆட்சியினை கவிழ்த்து மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மஹிந்த இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலிலை பெரிதும் எதிர்பார்த்திருந்தார். அதேபோன்று மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்கட்சியினரும் ஆட்சிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தென்னிலங்கை அரசியலில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறும் என்ற செய்திகள் வெளிவரும் நிலையில் தேர்தல் பரபரப்பாக இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் அடுத்து என்ன நடக்கும்? மஹிந்தவின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post