
இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்க முதலில் அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்டனர். பின்னர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் டி.இமான் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் படத்தில் முதல்முறையாக மெலடி கிங் டி.இமான் இசையமைப்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
I’d faced one common question all these years! When are you going to compose music for Thala?Now here i Have an answer!Yes it’s official,I’m Scoring for #Viswasam Friends!With your Blessings will give my Best👍Thanks Siva sir n SathyaJyothiFilms! PraiseGod! #DImmanMusicalViswasam pic.twitter.com/iuidrPuBlt
— D.IMMAN (@immancomposer) February 14, 2018
Post a Comment