வல்வை நகர சபையில் மீள் வக்குப்பதிவு நடத்தக்கோரும் த.தே.கூ - Yarl Voice வல்வை நகர சபையில் மீள் வக்குப்பதிவு நடத்தக்கோரும் த.தே.கூ - Yarl Voice

வல்வை நகர சபையில் மீள் வக்குப்பதிவு நடத்தக்கோரும் த.தே.கூ

வல்வை நகர சபையில் மீள் வக்குப்பதிவு நடத்தக்கோரும் த.தே.கூ
வல்வெட்டித்துறை நகர சபைக்கன தேர்தலில் வாக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு மீள் வக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் திணைக்களத்திடம் கோரியுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் படி வல்வெட்டித்துறை நகர சபையில் 7 வட்டாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றது.

மேலும் 2 வட்டாரங்களில் தொண்டைமானாறு வட்டாரத்தை ஈ.பி.டி.பி க்ட்சியும், ஆதி கோவிலடி வட்டாரத்தை மீன் சின்னத்தில் போடியிட்ட சுயேட்சைக் குழுவும் கைப்பற்றியது.

குறித்த இரு வட்டரத்தின் வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியை தம்வசன் வைத்துக்கொண்டு மோசடி நடை பெற்றுள்ளது. இதனாலே அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தது என்று அக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடு ஒன்றை தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்த 2 வட்டாரத்திலும் மீள் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post