சுதந்திர தினத்தில் மூடப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகம்! - Yarl Voice சுதந்திர தினத்தில் மூடப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகம்! - Yarl Voice

சுதந்திர தினத்தில் மூடப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகம்!

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச சபையின் சரசாலை பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கடமையாற்றும் ஊழியர்கள் சுகந்திர தினத்தை முன்னிட்டு அலுவலகத்தை மூடி புறக்கணிப்பு செய்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை கொண்டாடியபோதும் சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றாமல் அலுவலகத்தை முடியுள்ளமையால் தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

இந்த சுதந்திரக்கட்சியின் அலுவலகம் கடந்த தை மாதம்11 ஆம் திகதி சரசாலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து திறந்து வைத்ததிலிருந்து தொடா்ச்சியாக அலுவலம் திறந்திருந்தது.

ஆனால் இன்று(04) இலங்கையின் 70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு அலுவலம் மூடப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post