காணி ஆவணம் இல்லாத மக்களுக்காக 11 ஆயிரம் காணி ஆவணங்கள் மிக விரைவில் - Yarl Voice காணி ஆவணம் இல்லாத மக்களுக்காக 11 ஆயிரம் காணி ஆவணங்கள் மிக விரைவில் - Yarl Voice

காணி ஆவணம் இல்லாத மக்களுக்காக 11 ஆயிரம் காணி ஆவணங்கள் மிக விரைவில்

காணி ஆவணம் இல்லாத மக்களுக்காக 11 ஆயிரம் காணி ஆவணங்கள் தயாாிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளதுடன், இந்த காணி ஆவணங்கள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் கூறியுள்ளாா். 

வடமாகாண ஆளுநா் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே ஆளுநா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

2009ம் ஆண்டுக்கு பின்னா் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுடைய கா ணிகளில் 90 வீதமான காணிகள் மக்களிடம் மீளவும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த அரச காணிகளில்,

85 வீதமான காணிகளை இராணுவம் விடுவித்திருக்கின்றது. மேலும் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் 34 ஆயிரம் குடும்பங்களை சோ்ந்த மக்கள் குடியிருப்பதற்கு சொந்த காணி இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா்.

மேலும் பல்வேறு காரணிகளினால் குடியிருக்கும் அல்லது விவசாயம் செய்யும் காணிகளுக்கு ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் வீட்டு திட்டம் உள்ளிட்ட அரசின் கொடுப்பனவுகள் எதுவுமில்லாமல்,

பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். அவ்வாறு காணிகளுக்கு ஆவணங்கள் இல்லாத மக்களுக்காக 11 ஆயிரம் காணி ஆவணங்கள் தயாாிக்கப்பட்டுள்ளது.

காணி விடயம் மாகாணசபைக்குள் அடங்காத நிலையில் மத்திய காணி ஆணையாளா் நேரடியாக இங்கு வந்து இரு அமா்வுகளை நடத்திவிட்டு சென்றிருக்கின்றாா்.

இதனடிப்படையில் 11 ஆயிரம் காணி ஆவணங்கள் தயாாிக்க்பட்டுள்ளது. அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு மிக விரைவில் தொடங் கப்படும் என ஆளுநா் மேலும் கூறியுள்ளாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post