யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை - Yarl Voice யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை - Yarl Voice

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் நாளை காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குப்பிழான், ஏழாலை, கட்டுவன், சூராவத்தை, மயிலங்காடு, ஊரெழு,சுன்னாகம் சிவன் கோயிலடிப் பிரதேசம், சுன்னாகம் இலங்கை தொலைத் தொடர்பு நிலையம், ரொட்டியாலடி, அம்பலவாணர் வீதி, பெரியமதவடி, இலங்கை வங்கி முன் ஒழுங்கை, மாசியப்பட்டி, பெருமாள் கடவை, கந்தரோடை , மருதனார்மடம், மருதனார்மடம் யாழ்.நுண்கலைப்பீடம், சண்டிலிப்பாய் ஆலங்குளாய், உடுவில் ஆர்க் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்தடை வழமை போன்று அமுலிலிருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post