சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஐயசேகர யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இன்று சனிக்கிழமை யாழிற்கு வருகை தந்த தயாசிறி ஐயசேகர வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூiஐ வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
ஆதனைத் தொடர்ந்து யாழ் தட்டாதெருச் சந்தியிக்கு அருகாமையிலுள்ள லக்சுமி பிளாசா மண்டபத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்திட்ட மற்றும் அண்மையில் உருவாக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மறுசீரமைப்பு செயற்திட்ட மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் கட்சியினதும் கட்சியின் தமிழர் ஒன்றியத்தினதும் மறுசீரமைப்பு செயற்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் இதன் போது அண்மையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தொகுதி அமைப்பாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment