இனமானத் தமிழர்களால் தூள் தூளக்கப்படும் ரஜினிகாந்த் எனும் வெற்று பிம்பம் - சீமான்
அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021இல் நடக்கும் நடந்தே தீரும் என சீமான் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக நாயகன் கமலஹாசன் திரைத்துறையில் கால் பதித்து 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கமல் 60 என்ற நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு உள்ளரங்கில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்வராக மாறுவேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நினைத்து பார்த்திருக்க மாட்டார் . ஆனால் அந்த அதிசயம் நடந்துள்ளது . அந்த அதிசயம் நேற்று நடந்துள்ளது நாளையும் நடக்க உள்ளது என்று கூறினார்.
Post a Comment