ஐப்பானில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்து சாதனை படைத்தார் ஷின்ஷோ அபே
ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற சாதனையை ஷின்ஷோ அபே படைத்துள்ளார்.
ஜப்பான் பிரதமராக ஷின்ஷோ அபே பொறுப்பேற்று நேற்று (புதன்கிழமை) உடன் 2887 நாட்கள் நிறைவடைகிறது. இதன் மூலம் அந்த நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அபே பெற்றார்.
அவருக்கு முன்னதாகஇ கற்சுரா ராரோ என்பவரே ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். 1901ஆம் ஆண்டு முதல் 1913ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தார். அவரது சாதனையை தற்போது ஷின்ஷோ அபே முறியடித்துள்ளார்.
அதுமட்டுமன்றிஇ ஜி-7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமர் பொறுப்பை வகித்த 2ஆவது தலைவர் என்ற பெருமையையும் ஷின்ஷோ அபே பெற்றுள்ளார். இந்த வரிசையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஜேர்மனின் அதிபராக பதவி வகித்து வரும் அங்கெலா மேர்கல் முதலிடத்தில் உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷின்ஷோ அபேயின் தற்போதைய பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment