கோத்தபாயவின் புதிய அரசில் மேலும் இரு தமிழர்களுக்கு அமைச்சுப் பதவிகள்? - Yarl Voice கோத்தபாயவின் புதிய அரசில் மேலும் இரு தமிழர்களுக்கு அமைச்சுப் பதவிகள்? - Yarl Voice

கோத்தபாயவின் புதிய அரசில் மேலும் இரு தமிழர்களுக்கு அமைச்சுப் பதவிகள்?


கோட்டாபயவின் புதிய அரசாங்கத்தில் தமிழர்கள் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.

இதன்படி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனுக்கும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நாளை திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அந்தவகையில் மட்டக்களப்பு யாழ் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இடைக்கால அரசாங்கத்தில் 15 பேரைக் கொண்ட அமைச்சர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டது.

இதில் டக்ளஸ் மற்றும் ஆறுமுகன் தொன்டமானுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post