வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியில் தவறான விடயங்கள் பரப்பப்படுவதாக வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு - Yarl Voice வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியில் தவறான விடயங்கள் பரப்பப்படுவதாக வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு - Yarl Voice

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியில் தவறான விடயங்கள் பரப்பப்படுவதாக வாசுதேவ நாணயக்கார குற்றச்சாட்டு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியில் தவறான விடயங்கள் பரப்பப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் 'வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்தன.

இவ்வருடத்திற்கான கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்வருட செலவினங்களுக்கு இந்த கணக்கறிக்கை சமர்க்கப்படுகிறது. பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அரசாங்கம் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளது.

நிரந்தர வருமானமற்ற பொதுமக்களுக்கும்இ சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரை ஊக்குவிப்பதற்கும்இ அரசாங்கத்தின் பங்களிப்புடன் முதலீட்டுக்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேபோன்று வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நிதிக் கொள்கையை தயாரிப்பதற்கும் வரிச் சுமையை குறைப்பதற்கும்இ தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தனிப்பட்ட நபர் மற்றும் உருவப்படங்களுக்கு பதிலாக அரசாங்கத்தின் இலச்சினையை காட்சிப்படுத்துவதற்காக புதிய ஜனாதிபதி மேற்கொண்டமை முன்மாதிரியான விசேட எடுத்துக்காட்டாகும்.

அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களில் குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் தேசிய மற்றும் உள்ளூர் வளங்களை எந்த வகையிலும் வெளிநாடுகளுக்கு வழங்காது. அதிக வட்டிக்கு நுண்கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள்இ அந்த கடனைச் செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வசதிகள் செய்யப்படும். இதற்குத் தேவையான ஆலோசனைகள் இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post