தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டித்த மாணவர்கள் - Yarl Voice தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டித்த மாணவர்கள் - Yarl Voice

தடைகளைத் தகர்த்தெறிந்து மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டித்த மாணவர்கள்


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு நிர்வாகத்தால் தடை விதித்து உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் படலையை உடைத்து உள்நுழைந்துள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிலையிலேயே இந்த தடையை பல்கலைக்கழக பீடாதிபதிகள் கூடி எடுத்த முடிவுக்கு அமைய பொறுப்பு வாய்ந்த அதிகாரி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் அங்கு கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்துள்ளனர்.

அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள மாவீரர் தினைவாலயத்தில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post