வடக்கு ஆளுநர் பதவியை ஏற்கமாட்டேன் முரளிதரன்
வடமாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்பதற்கு விருப்பம் வெளியிட்டதாக தன்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முதளிதரன் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்ததாகவும் அதன்போது வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முரளிதரன் ஏற்றதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி எமது செய்திப் பிரிவு முத்தையா முரளிதரனுடன் தொலைபேசி ஊடாக வினவியது. இதற்கு பதிலளித்த அவர் ஜனாதிபதியை நேற்று இரவு சந்தித்தது உண்மைதான். ஆனால் வடமாகாண ஆளுநர் பதவியை ஏற்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அது முற்றிலும் வதந்தி என்று கூறினார்.
Post a Comment