எவருக்காகவும் இரானுவத்தினர் குறைக்கப்படவோ இரானுவ முகாம்கள் அகற்றப்படவோ மாட்டாது - பாதுகாப்பு செயலாளர் அதிரடி - Yarl Voice எவருக்காகவும் இரானுவத்தினர் குறைக்கப்படவோ இரானுவ முகாம்கள் அகற்றப்படவோ மாட்டாது - பாதுகாப்பு செயலாளர் அதிரடி - Yarl Voice

எவருக்காகவும் இரானுவத்தினர் குறைக்கப்படவோ இரானுவ முகாம்கள் அகற்றப்படவோ மாட்டாது - பாதுகாப்பு செயலாளர் அதிரடிதேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவரது கோரிக்கையின் அடிப்படையிலும் இராணுவ முகாம்கள் நீக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் இன்று முற்பகல் தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் வடக்கில் காணி விடுவிப்பு மற்றும் இராணுவ முகாம்களை நீக்குவது தொடர்பான உங்களின் நிலைப்பாடு என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்கள் நீக்கப்பட மாட்டாது.

நாட்டின் பாதுகாப்புக்காக அவசியமான இடங்களில் இராணுவம் நிலைகொண்டிருக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

எனவே எவரும் கூறுவதுபோல தேசிய பாதுகாப்பை சிறுமைப்படுத்தி எவரது கோரிக்கைக்கும் அமைய இராணுவ முகாம்களோ அல்லது இராணுவமே அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற அடிப்படையில் அடக்குமறை நடவடிக்கைகளை கடைபிடிக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம்இ ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரென அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பாதுகாப்பு செயலாளர்இ அவ்வாறு பணியாற்றுவதாயின் அது சிறந்ததாகும் என குறிப்பிட்டுள்ளார்.

வடக்குஇ மக்களுக்கு பாரிய சேவைகளை ஆற்றவேண்டிய தேவை உள்ளது.

எமது அரசாங்கத்தின் மூலம் பாரிய சேவை ஆற்றப்படவேண்டியுள்ளது.

இந்த நிலையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களின் பிரதிநிதிகளாயின்இ வேறு பக்கத்திற்கு கொண்டுசெல்லாமல்இ மக்களுக்கு நன்மை செய்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வே;ணடும்.

வடக்கு மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் இருந்தே செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன்இ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்இ பாரிய பணிகளை மேற்கொண்டிருந்தார் என பாதுகாப்பு அமைச்சின் வெயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இதேநேரம்இ சட்டத்துக்கு புறம்பான முறையில் சிறைவைக்கப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரதிநிதிகளை சட்டரீதியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post