பதவி முக்கியமல்ல ஆனாலும் கவலை - மனோ கணேசன் - Yarl Voice பதவி முக்கியமல்ல ஆனாலும் கவலை - மனோ கணேசன் - Yarl Voice

பதவி முக்கியமல்ல ஆனாலும் கவலை - மனோ கணேசன்


'பதவி இல்லாமை எனக்கு சோகமில்லை. ஆக நான் ஆரம்பித்த பல பணிகள் இன்னமும் நிறைவு பெறவில்லையே என்பதே என் கவலை.' என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோனபூர்வ பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ

'ஒருபோதும் அணி மாறாமல்இ 2001ம் வருடம் முதல் எதிர்கட்சியிலேயே இருந்துஇ உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடத்தல்இ கப்பம் ஆகிய அடக்குமுறைகளுக்கு எதிராகஇ எதிரணியில் இருந்து போராடிய எனக்குஇ 2015ம் ஆண்டு எமது அரசை அமைத்ததும்இ ஒரு 'பெரிய'அமைச்சை ரணில் தருவார் என எதிர்பார்த்தது என்னவோ உண்மைதான்.

ஆனால்இ 'நெசனல் டயலொக் மினிஸ்ட்ரி' என்று ஒரு அமைச்சை ரணில் விக்ரமசிங்க எனக்கு 2015 செப்டம்பரில் கொடுத்த போதுஇ அது என்னவென்று எனக்கே புரியவில்லை.

பலர் 'டயலொக் மட்டும்தானா? மொபிடெல்இ செல்டெல்இ எயார்டெல் இல்லையா' என கிண்டல் அடித்தார்கள்.

நான் மனந்தளராமல் பல ஆண்டுகளாக அரசுக்கு உள்ளேயே சண்டை போட்டு போராடிஇ என் அமைச்சுக்கு பல புதிய அம்சங்களை கேட்டு எடுத்து சேர்த்துக்கொண்டுஇ பெரிதாக வளர்த்து எடுத்தேன்.

கடைசியாகஇ 2019ல் நான் விடைபெறும்போது அது 'தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள்இ சமூக மேம்பாடுஇ இந்து சமய அலுவல்கள் அமைச்சு' என்று நான்கு விடயங்களை கொண்ட 'பெரிய அமைச்சாக வளர்ந்திருந்தது.

இதில் முக்கியமாக 'சமூக மேம்பாடு' என்ற துறை மூலம்இ எனது தொகுதி கொழும்பை தவிர கண்டி இரத்தினபுரி கேகாலை களுத்துறை கம்பஹா மாத்தளை மட்டக்களப்பு அம்பாறை வவுனியாமன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு பாடசாலை கட்டிடங்கள் பாடசாலை பிள்ளைகளுக்கு கல்வி உபரகரணங்கள் வழங்கள்இ பொது மண்டபங்கள் அமைத்தல் வீதிகள் புனரமைத்தல் ஆலயங்களுக்கு உதவி ..... உட்பட பல்வேறு விடயங்களுக்கு மில்லியன் கணக்கான நிதி தொகைகளை ஒதுக்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்ய என்னால் முடிந்தது.

இது தவிர அடையாள அட்டைஃதிருமண சான்றிதழ்ஃபிறப்பு சான்றிதழ் போன்ற அரச ஆவணங்களை பெற்று தரும் இலவச நடமாடும் சேவைகள் ஐம்பத்து-இரண்டை (52) நாடு முழுக்க நடத்தியுள்ளேன்.

ஆரம்பத்தில் எனது அமைச்சை பற்றி அறிந்த பலர் அதன் பிற்கால வளர்ச்சியை பற்றி அறியாமல் சஜித் வென்றால் 'நல்ல' ஒரு அமைச்சை எடுங்கள் என்றார்கள். ஆனால் சஜித் வெற்றி பெற்றிருந்திருந்தால்இ நான் இதே அமைச்சைதான் கேட்டு வாங்கி இருப்பேன்.

இப்போது எனது அமைச்சு மூலம் நான் ஆரம்பித்து இடையில் இருக்கும் ஒரு பகுதி அபிவிருத்தி பணிகளை இந்த அரசு வந்த இரண்டு தினங்களில் நிதி அமைச்சு சுற்றறிக்கை மூலம் இடை நிறுத்தி உள்ளது.

நான் உருவாக்கிய எனது அமைச்சின் கீழ் வந்த ஏழு நிறுவனங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு அமைச்சுகளின் வைக்கப்பட ஏற்பாடு நடக்கிறது.

பதவி இல்லாமை எனக்கு சோகமில்லை. ஆக நான் ஆரம்பித்த பல பணிகள் இன்னமும் நிறைவு பெறவில்லையே என்பதே என் கவலை.' என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post