யாழ் பல்கலைக்கழகத்தில் 1812 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது - கந்தசாமி - Yarl Voice யாழ் பல்கலைக்கழகத்தில் 1812 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது - கந்தசாமி - Yarl Voice

யாழ் பல்கலைக்கழகத்தில் 1812 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்படவுள்ளது - கந்தசாமி


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் வௌ்ளிக்கிழமை (06) முதல் ஞாயிற்றுக்கிழமை (08) வரை நடைபெறவுள்ளது.

11 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலைப்பீடம் விஞ்ஞான பீடம் முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் விவசாய பீடம் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 1369 உள்வாரிப் பட்டதாரிகளுக்கும் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 64 பட்டபின் படிப்பு பட்டதாரிகளுக்கும் 31 டிப்ளோமாதாரிகளுக்கும் பட்டங்களும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் 348 வெளிவாரிப்பட்டதாரிகளின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post