இருட்டு அறையில் முரட்டு குத்து 2 குறித்து வெளியான தகவல் - Yarl Voice இருட்டு அறையில் முரட்டு குத்து 2 குறித்து வெளியான தகவல் - Yarl Voice

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 குறித்து வெளியான தகவல்


இருட்டு அறையில் முரட்டு குத்து 2'  மிகவும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வருவதாக பிரபல  நகைச்சுவை நடிகர் சாம்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆண்டு நகைச்சுவை கலந்த பேய் படமாக வெளியான திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் யாஷிகா ஆனந்த் வைபவி சாண்டில் ஷாரா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த  படத்தை 'ஹர ஹர மஹா தேவகி'இ  'கஜினிகாந்த்' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கி இருந்தார். இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து  நகைச்சுவை நடிகர் சாம்ஸ் தனது ருவிட்டர் பக்கத்தில்  இயக்குநரும் நடிகருமான ரவி மரியா  மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட  ஒளிப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

அந்த பதிவில் இருட்டு அறையில் முரட்டு இரண்டாம் பாகத்தில் நாங்கள் மிகவும் கலகலப்பாகவும் சந்தோசமாகவும் நடித்து வருகின்றோம். அந்தவகையில் படமும் சிறந்த முறையில் தயாரிக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post