சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து, 2 கோடி ரூபா இழப்பு - Yarl Voice சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து, 2 கோடி ரூபா இழப்பு - Yarl Voice

சாவகச்சேரி வர்த்தக நிலையத்தில் தீ விபத்து, 2 கோடி ரூபா இழப்பு


சாவகச்சேரியில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தினால் சுமார் இரண்டு கோடி ருபா பெறுமதியான பொருட்கள் தீபயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் சாவகச்சேரிச் சந்தியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இன்று இரவு இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதன்  போது குறித்த வர்த்தக நிலையம் முற்றாக தீயில் எரிந்ததுடன் அதனருகில் இருந்த வர்த்தக நிலையங்களுக்குமு; தீ பரவியுள்ளது.

இதனையடுத்து அங்குள்ள வர்த்தகர்களுமு; பொது மக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் சம்வ இடத்திற்குச் சென்று தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆயினுமு; குறித்த வர்த்தக நிலையத்தில் சுமார் இரண்டு கோடி ருபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற சாவகச்சேரி பொலிஸார் தீ விபத்துக்காண காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post