இரானுவ பிடியிலிருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பதுடுவதுடன், காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் - ஐனாதிபதிக்கு யாழில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை - Yarl Voice இரானுவ பிடியிலிருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பதுடுவதுடன், காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் - ஐனாதிபதிக்கு யாழில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை - Yarl Voice

இரானுவ பிடியிலிருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பதுடுவதுடன், காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் - ஐனாதிபதிக்கு யாழில் இருந்து விடுக்கப்பட்ட கோரிக்கை


ஆட்சி மாற்றத்தின் பின்னர் பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இரானுவத்தின் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவித்து அந்த இடங்களில் மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவரும் வலி வடக்குப் பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.சஜீவன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

கடந்த ஐனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சிமாற்றமொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் புதிதாக வந்திருக்கின்ற ஐனாதிபதி சில நல்லெண்ண நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். அந்த நல்லெண்ன நடவடிக்கைகளில் படைத்தரப்பிடமுள்ள காணிகளை விடுவிப்பதுடன் மேலும் காணிகள் சுவீகரிக்க எடுக்கின்ற முயற்சிகளையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று கோருகின்றோம்.

ஏனெனில் இரானுவத்தின் உயர் பாதுகாப்பு வலியமாக இருந்த வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடந்த ஆட்சியில் சுமார் 2500 ஏக்கர் காணிகள் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு மக்கள் மீள் குடியேறி வருகின்றனர். ஆனால் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் காணிகள் இரர்னுவத்தினம் வசம் இருக்கின்றது. அதனை விடுவிக்க வேண்டுமென்றே நாங்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

குறிப்பாக கடந்த ஆட்சியில் இரானுவத்தின் வசமிருந்த காணிகள் விடுவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு ஒரு தொகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றத்தினால் அந்த நடவடிக்கைகள் தடைப்பட்டிருக்கின்றன. ஆகவே புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கின்றவர்கள் விடுவிக்கப்படாமல் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே வேளை இரர்னுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட மாட்டாது. இரானுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்திருக்கின்றார். ஆனால் அந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த காணி விடுவிப்பு நடவடிக்கைளை இந்த அரசாங்மும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் இரானுவத்தினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டுமென நாங்கள் வலியுறத்தி வருகின்ற அதே நேரத்திலேயே குடாநாட்டின் பல இடங்களிலும் படையினரின் தேவைக்காக பொது மக்களின் காணிகளைச் சுவீகரிக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே பொது மக்களின் காணிகள் சுவீகரிப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post