சமானதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அரச மரக் கிளையுடன் யாழிலிருந்து ஐனாதிபதி செயலகம் வரை நடைபயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது - Yarl Voice சமானதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அரச மரக் கிளையுடன் யாழிலிருந்து ஐனாதிபதி செயலகம் வரை நடைபயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது - Yarl Voice

சமானதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி அரச மரக் கிளையுடன் யாழிலிருந்து ஐனாதிபதி செயலகம் வரை நடைபயணம் ஆரம்பிக்கப்படவுள்ளது


சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி யாழிலில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை நடைப்பயணத்தினை நாளை ஆரம்பிக்கவுள்ளதாக வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மகிந்த தேரரால் தேவநம்பிய தீசன் மன்னனுக்கு வாக்குறுதி ஒன்று வழங்கப்பட்டது . அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவரது சகோதரியும் இ அசோக சக்கரவர்த்தியின் மகளுமான சங்கமித்தாதேவியால் புத்தபகவான் ஞான ஒளி பெற்ற புனித கயாவில் இருந்து புனிதமான வெள்ளரசு மரத்தின் கிளையானது 2300 வருடங்களுக்கு முன்னர் இதே போன்றதொரு மார்கழி தினத்தில் கொண்டு வரப்பட்டது .

அதே போன்றதொரு தினமாக இன்றைய மார்கழி பௌர்ணமி தினம் அமைகிறது . அதே நாளில் நான் புதிய அரசாங்கத்திற்கும் இ பிரதமருக்கும் அரசு தலைவர் மற்றும் அவர்களது ஒற்றுமையான குடும்பத்தினருக்கும் இந்த நாட்டின் கௌரவ குடிமக்கள் அனைவருக்கும் தமிழ் மக்களின் நல்ல நோக்கம் நல்ல எண்ணத்தோடு கூடிய சமாதான செய்தியை அறிவிப்பதற்காக இந்த சமாதான நடை பயணத்தை நாளை ஆரம்பிக்கவுள்ளேன்.

நான் இந்த பயணத்தை ஆரம்பிக்க உள்ள இடம் வரலாறு இ சமயம் இ கலாசாரம் ஆகிய வற்றை இலங்கைக்கு தொடர்புபடுத்திய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் .

இந்த இடம் பௌத்தர் களினால் சம்புமல் துறை என்றும் சங்கமித்தாதேவி என்ற மாது கரையிறங்கிய படியால் மாதகல் என்றும் தமிழில் அழைக்கப்படுகிறது.

இந்த புனிதமான இடத்திலிருந்து தொடங்கும் எனது நடை பயணம் கடந்த காலத்தை நினைவூட்டும் விதமாகவும் தற்போதைய அரச தலைவர்இபிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளடங்கிய அரசாங்கத்திடம் ஒரு சமாதான செய்தியை அறிவிப்பதற்காகவும் ஒரு உயிருள்ள அரச மரக்கன்றுடன் ஆரம்பிக்கின்றேன்.

இதனை தமிழ் மக்களின் சார்பில் புதிய அரச தலைவருக்கு கையளிப்தே எனது நோக்கமாகும். இதன் வேர்கள் தெற்கிலே சமாதானத்தை ஆழமாகப் பதித்து வேரூன்றி இ சிங்கள மக்கள் நேசிக்கும் பௌத்த பகவானின் போதனைகளைப் போல தழைத்தோங்கிட வேண்டும் . இந்த சமாதானம் சகல இன மக்களிடையேயும் துளிர்த்து வேர்விட செய்ய வேண்டும் .

மேலும் இந்த சமாதான அறிவிப்பானது பாராளுமன்ற உறுப்பினர்கள்  அமைச்சர்கள் . உள்ளிட்ட அரசாங்கத்தினை நடத்தி செல்லும் புதிய பிரதமர் மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ச மற்றும் அரச தலைவர் மேன்மை தங்கிய கோட்டபாய ராஜபக்ச ஆகியோருக்கு ஆற்றலையும் நம்பிக்கையும் பெருகப் பண்ணட்டும். புதிய தேசம் ஒன்றை ஒன்றாக சேர்ந்து கட்டி எழுப்புவோம் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post