இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை - எச்.ராஜா - Yarl Voice இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை - எச்.ராஜா - Yarl Voice

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் ஆட்சேபனை இல்லை - எச்.ராஜா


இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆட்சேபனை இல்லை என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய எச்.ராஜா

'இலங்கையை பொறுத்த வரை இலங்கையிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பா.ஜ.க. செயல்படுகிறது.

குடியுரிமை திருத்த சட்டமூலம் குறித்து இலங்கையின் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உட்பட பலரிடம் பா.ஜ.க. பேசியுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பா.ஜ.க.வுக்கு ஆட்சேபனை இல்லை.

தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிப்பார் 'எனத்தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post