மணல் அகழ்விற்கு கட்டுப்பாடு வேண்டும் வழித்தட கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் - மணல் அகழ்வு பாதிப்பு குறித்து சிவஞானம் கருத்து
ஐனாதிபதியின் தீர்மானத்தின் பின்னராக சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற மணல் அகழ்வை தடுத்து நிறுத்த வேண்டியது மிக மிக அவசியமானது. ஆகையினால் மணல் அகழ்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென்று தமிழரசுக் கட்சியின் மூத்த துணை தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யுhழில் இன்று இடம்பெற்ற மகாகவி பாரதியாரின் ஐனன தினத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
கனியப் பொருட்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெறுவதை புதிய ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச இரத்துச் செய்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் அதனால் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம்.
அதாவது நாட்டில் இடம்பெற்ற ஐனாதிபதி தேர்தலுக்குப் பின்னராக புதிதாகப் பதவியெற்றிரக்கின்ற ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச மணல் கல் பொருட்களுக்ககு வழித்தட அனுமதிப் பத்திரங்கள் பெறுவதை தடை செய்திருக்கின்றார். அவ்வாறு இந்தப் பொருட்களுக்களின் ஏற்றுமதி போக்குவரத்தை இலகுபடுத்தியது வரவேற்கக் கூடிய விசயம் தான்.
ஆனால் இப்பொழுது அனுமதிப் பத்திரம் இல்லை என்றவுடன் குறிப்பாக மணலைப் பொறுத்தவரையில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் எங்கெல்லாம் மணல் எடுக்க முடியுமோ அங்கெல்லாம் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக பொது மக்களுக்கு பல்வெறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இந்த மணல் அகழ:வுப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இது தொடர்பில் மக்கள் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே தான் போக்குவரத்தை இலகுபடுத்திக் கொண்டு அதாவது போக்குவரத்திற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் வழித்தட அனுமதிப் பத்திரங்களை வழங்கினாலும் மணல் அகழ்வுக்கான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமென்று கோருகின்றோம். அதாவது மணல் அகழ்வுக்கு கட்டுப்பாட்டை விதித்து போக்குவரத்திற்கு கட்டுப்பாட்டை தளர்த்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றார்.
Post a Comment