சட்டவிரோத மணல் அகழ்வை அரச அதிபர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - சபா குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice சட்டவிரோத மணல் அகழ்வை அரச அதிபர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - சபா குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice

சட்டவிரோத மணல் அகழ்வை அரச அதிபர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - சபா குகதாஸ் வலியுறுத்து


யாழ் மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்சவினால் மணல் அனுமதிப் பத்திரம் பெறத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்திருக்கின்றமை பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகின்றதென்பதுடன் வளங்களும் அழிக்கப்படுகின்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணல் அகழ்வு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

மணல் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதிப் பத்திரம் ரத்து செய்த பின்பு சட்டவிரோத மணல் அகழ்வு யாழ் வடமராட்சிப் பல பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் பிரதேச மக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன .

இதனை நிவர்த்தி செய்ய மணல் அகழ்வுக்காக இனம் காணப்பட்ட கனியவளப்பகுதியின் அனுமதிக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழும் செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டியது மிக அவசியமானது.

இயந்திரங்களை கொண்டு முன்னெடுக்கப்படும் சட்டவிரோத அகழ்வினால் பல சூழல் பாதிப்புக்களும், இயற்கை அனர்த்தங்களும், கரையோரப் பகுதிகளுள் கடல் நீர் உட்புகும் அபாயங்களும், நன்னீர் நிலைகளுள் உவர்நீர் உட்புகும் அபாயமும் ஏற்படக் கூடிய நீண்ட காலப் பாதிப்புக்கள் உள்ளன.

எனவே சூழலின் நீண்டகால பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு தடுத்து நிறுத்துவதுடன் சட்டவிரோத செயற்பாடு மேலோங்குவதையும் நிறுத்த வேண்டும். ஆகையினால் அரசாங்க அதிபர் இந்த விடயத்தில் விசெட கவனமெடுத்து உரிய நடவடிக்கைகயை எடுக்க வேண்டும். அதனூடாகவே மக்களையும் வளத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post