ராஐபக்சாக்களின் காலத்தில் தீர்வு சாத்தியம், இல்லையேல் தீர்வு என்பது கனவு, அபிவிருத்தியுடன் தீர்வை நோக்கி பயணிக்க தமிழ்க் கட்சிகளுக்கு அங்கஐன் அழைப்பு - Yarl Voice ராஐபக்சாக்களின் காலத்தில் தீர்வு சாத்தியம், இல்லையேல் தீர்வு என்பது கனவு, அபிவிருத்தியுடன் தீர்வை நோக்கி பயணிக்க தமிழ்க் கட்சிகளுக்கு அங்கஐன் அழைப்பு - Yarl Voice

ராஐபக்சாக்களின் காலத்தில் தீர்வு சாத்தியம், இல்லையேல் தீர்வு என்பது கனவு, அபிவிருத்தியுடன் தீர்வை நோக்கி பயணிக்க தமிழ்க் கட்சிகளுக்கு அங்கஐன் அழைப்பு


பெரும்பான்மை மக்களின் அதிக ஆதரவைக் கொண்டுள்ள ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஐபக்ச ஆட்சிக் காலத்திலேயே அபிவிருத்தியுடன் தீர்வை அடைய முடியும். இந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தீர்வு சாத்தியமாக உள்ளதால் அதனடிப்படையில் தமிழ்த் தர்ப்பினரகள் செயற்பட வேண்டும். இல்லையேல் தீர்வு என்பது கனவாகவே இருக்குமென பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஐன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

நிச்சயமாக தீர்விற்காக போராட வேண்டும். ஆனால் தீர்வை மட்டும் முன்வைத்த அபிவிருத்தியை புற்ந்தள்ளுவதால் தொடர்ந்தும்; கஸ்ரத்திற்குத் தான் மக்கள் போவார்கள். ஆகவே நான் நம்புகின்றேன் அபிவிருத்தியுடன் தீர்வை Nhநக்கி போகின்றோம் என்று தான். ஆகவே அபிவிருத்திப் பாதையில் பயணித்தால் நிச்சயமாக தீர்வை அடைய முடியும். மக்களும் அதை உணர்ந்துள்ளார்கள். அதே போல மற்ற அரசியல் கட்சிகளும் அதை உணர வேண்டும்

அதனுர்டாக அபிவிருத்தியுடன் தீர்வை நோக்கி நாங்கள் போக முடியுமென்று நான் நம்புகின்றேன். மக்கள் இண்றைக்கு சாப்பாடு இல்லாமல் இருக்க நாளைக்கு உணவு கிடைத்தாலும் அதற்கு அவர்கள் இருக்கிறார்களா இல்லை என்ற நிலைமை இருக்கிறது. அப்படி எதுவும் கிடைத்து பிரயோசனம் இல்லை. ஆக தீர்வும் கிடைக்க வேண்டும் சாப்பாடும் கிடைக்க வேண்டும்.

ஆகவே எங்களை வலுப்படுத்தவதற்கு அபிவிருத்தி வேண்டும். நாங்கள் நிண்டகாலமாகப் போராடிக் கொண்டிருப்பதற்கு தீர்வு வேண்டும். அதனடிப்படையில் அபிவிருத்தியுடன் கூடிய தீர்வைப் பெறமுடியும்.
அபிவிருத்தியுடன் தீர்வை நிச்சயமாக் அடைய முடியுமேன்று நான் நம்புகிறேன்.

வறுமையிலும் தமது உரிமையை இன்னும் அடைய வேண்டும் என்று ;. இன்றைக்கு வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் நினைக்கிறார்கள். அபிவிருத்திகள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை பாகுபாடு பார்த்து நடக்கிறது என்று தான் நாங்கள் போராடியிருந்தோம். ஆனால் இன்றைக்கு அபிவிருத்தி சமமாகக் கிடைக்கின்றது. அபிவிருத்தி கடைப்பது போன்று தீர்வும் கிடைக்க வேண்டும்.

ஆகவே நாங்கள் எங்களுடைய இருப்பைத் தக்க வைத்துக் கொண்டு தான் உரிமைக்கான போராட்டம் செய்ய வேண்டும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் அது நடக்குமென்று நம்புகின்றேன். ஏனென்றால் அபிவிருத்தி Nவைத்திட்டங்கள் நடக்கின்ற போது இருப்பு நிச்சயமாக உறுதி செய்யப்படும்.

 இன்றைய ஐனாதிபதி பிரதமர் தான் பெரும்பான்மை மக்கள் மத்தயில் செல்வாக்கை கொண்டவர்கள். ஆகவே தீர்விற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு வேண்டும் என்று இன்றைக்கு ஐனாதிபதி சொல்லியிருப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட பலரும் விமர்சித்தும் இருந்தார்கள்.

அதாவது பெரும்பான்மை மக்களின் விருப்பத்துடன் தான் எந்த வேலைத் திட்டத்தையும் நாங்கள் முன்னெடுக்க முடியும் என்று ஐனாதிபதி சொல்லியிருந்தார். ஆனால் பெரும்பாண்மை விரும்பாத எந்த வேலைத் திட்டத்தையும் முன்னெடுக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. அப்படிச் சொல்லும் போது; ஐனாதிபதி பிரதமர் ஆகியோர் தமிழ் மக்களுக்கான தீர்வைக் கொண்டு வந்தால் நிச்சயமாக பெரும்பான்மை எதிர்க்க்காது என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் பெரும்பான்மை இவர்களுடன் தான் இருக்கிறது.

ஆகவே இந்த அரசுடன் பேச்சுவார்த்தை வைத்து அந்தத் தீர்வைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே தீர்வு என்பது சாத்தியம். இல்லாவிட்டால் தீர்வு என்பது மிகப் பெரிய கனவாகத் தான் போய்விடும். ஏனென்றால் உங்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் சிறுபான்மையின் வாக்குகள் தான் பெரும்பான்மையை ஏற்படுத்தியதாக அந்த அரசாங்கம் இருந்தது. ஆனால் பெரும்பான்மையினுடைய வாக்குகள் குறைவாத் தான் இருந்தது.

ஆதனால் எந்தவொரு தீர்வையும் கொண்டு வர அவர்கள் எப்போதும் பயப்பட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். ஏனென்றால் பெரும்பான்மையினுடைய வாக்குகள் இழந்துவிடுவோமோ என்றதால்;. ஆனால் இவர்களுக்கு பெரும்பான்மையுடைய வாக்குகள் தான் மிகப் பெரிய பலமே.

ஆகவே இவர்கள் பெரும்பான்மையினருடைய நம்பிக்கையை வென்றிருக்கின்றார்கள். எனவே இவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் கொண்டு வந்தால் அதனை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அது தான் ஐனாதிபதி சொன்னதன் உள் அர்த்தம். அதை விளங்காமல் தான் எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்று நான் நம்புகின்றேன்; என்றார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post