காணாமல் போனவர்களுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும் தப்பிப்தற்கு இடமளிக்கப் போவதில்லை - சுமந்திரன் - Yarl Voice காணாமல் போனவர்களுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும் தப்பிப்தற்கு இடமளிக்கப் போவதில்லை - சுமந்திரன் - Yarl Voice

காணாமல் போனவர்களுக்கு கோத்தபாயவே பொறுப்புக் கூறவேண்டும் தப்பிப்தற்கு இடமளிக்கப் போவதில்லை - சுமந்திரன்


காணாமல் போனோர் விவகாரத்தில் பொறுப்புக் கூற வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்சவையே சாருமெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டது எனச் சொல்லி தப்பித்தக் கொள்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது காணாமற்போனோர் விவகாரத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..

ஐனாதிபதி பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தான் அனைவரும் யுத்தத்தின் போது காணாமலாக்கப்பட்டவர்கள். வலிந்து காணாமலாக்கப்பட்டிருந்தவர்களாக இருக்கின்றனர். ஆகவே அதற்கான பொறுப்புக் கூற வேண்டிய பாரிய பொறுப்பு இன்றைய ஐனாதிபதி கோத்தபாய ராஐபக்சவை தான் சாரும்.

யுத்த காலத்திலே பலர் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சொல்வது ஒரு கூற்று. ஆனால் யுத்தம் முடிவடைந்த கையோடு யுத்த சூழ்நிலைகளில் இருந்து வெளிவருகின்ற மக்கள் அரச அறிவிப்பின் காரணமாக தங்களுடைய இளையவர்களை அரசாங்கப் படையினரிடையே பாரங் கொடுத்தது வேறொரு விடயம்.

அது காணாமல் போன விடயம் அல்ல. அவர்களிடத்தே சரணடைவதற்கு கொடுக்கப்பட்டவர்கள். எங்கே என்று தெரியாத சூழ்நிலை இருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் இந்தக் கேள்வியை அவரிடத்தே கேட்ட போது அவர் மழுப்பினார். ஏதிர்காலத்தை நோக்கி மட்டும் பார்ப்போம் என்றும் சொன்னார்.

அத்தோடு பிற்காலத்தை நோக்கி ஏன் பார்க்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குத் தினறியதை நாங்கள் பார்த்தோம். ஆனால் அவர் அதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அரசியல் மயப்படுத்தல் என்பது வேறு விசயம். ஏல்லா விடயங்களும் அரசியல் மயப்படுத்தப்படும். ஆகையினால் நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் அதுவல்ல. உங்களிடத்திலே பாரங் கொடுக்கப்பட்டவர்கள் உங்களிடத்திலே சரணடைந்தவர்கள் எங்கே என்று கேட்டால் அதற்கு சரியான பதிலைச் சொல்ல வேண்டுமே தவிர இது அரசியல் மயப்படுத்தப்பட்ட கேள்வி என்று சொல்லித் தப்பித்துக் கொள்வதற்கு நாங்கள் இடங்கொடுக்க மாட்டோம் என்றார

0/Post a Comment/Comments

Previous Post Next Post