தேசத்தைப் பிரிக்கின்றனர் மோடியும் அமித்ஷாவும் - ராகுல் குற்றச்சாட்டு - Yarl Voice தேசத்தைப் பிரிக்கின்றனர் மோடியும் அமித்ஷாவும் - ராகுல் குற்றச்சாட்டு - Yarl Voice

தேசத்தைப் பிரிக்கின்றனர் மோடியும் அமித்ஷாவும் - ராகுல் குற்றச்சாட்டு


பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டார்கள் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் காங்கிரஸ் கட்சி மீது குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி ருவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

குறித்த பதிவில்  அன்பார்ந்த இளைஞர்களே! பிரதமர் மோடியு  உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சேர்ந்து உங்கள் எதிர்காலத்தை அழித்துவிட்டார்கள். நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய சேதம்  வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாததால் ஏற்பட்டுள்ள உங்கள் கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாது.

அதனால்தான் மோடியும்  அமித் ஷாவும்  வெறுப்பின் பின்புறம் மறைந்து கொண்டு அன்புக்குரிய நம்முடைய தேசத்தைப் பிரிக்கிறார்கள். ஒவ்வொரு இந்தியர் மீதும் அன்பால் பதில் அளித்தால் மட்டுமே நாம் அவர்களை வீழ்த்த முடியும்' என்று பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post