அமெரிக்காவில் துப்பாக்கிசூடு பலர் காயம் - Yarl Voice அமெரிக்காவில் துப்பாக்கிசூடு பலர் காயம் - Yarl Voice

அமெரிக்காவில் துப்பாக்கிசூடு பலர் காயம்


அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நியூ ஓர்லியன்ஸின் '7‘700 block of Canal Street’' என்ற இடத்திலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணிக்குள் இடம்பெற்றதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்தவர்கள் நியூ ஓர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும் ஏனையயோர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகபடியான சனத்தொகை இருந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமையினால் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்படவில்லை என நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post