வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். - நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்! - Yarl Voice வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். - நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்! - Yarl Voice

வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். - நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!


மீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும் குறிப்பாக கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பாரிய திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நோர்வே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைனா ஜொனான்லி எஸ்கெட்ல் தலைமையிலான குழுவினரிடம் கௌரவ அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(13.12.2019) நடைபெற்ற குறித்த சந்திப்பில்இ நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு நோர்வே மேற்கொண்டு வருகின்ற வேலைத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அவர்கள்இ எதிர்காலத்தில் அவை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இதன்போது கருத்துதெரிவித்த நோர்வே தூதுவர்இ இலங்கையில் படகு கட்டும் தொழில் துறையிலும் அதேபோன்று நன்னீர் மற்றும் குளம்இ களப்பு போன்ற நீர் நிலைகளில் கடல் உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாக ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்ததுடன்  குறித்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனியார் முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும்இ ஏற்கனவே வேலைத்திட்டம் ஒன்றை காரைநகர் பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாகவும் முதற்கட்டமாக பிடிக்கப்படுகின்ற மீன்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்ட  மீன்பிடிப் படகுகள் கட்டுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏற்கனவே தொழில்சார் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில்இ வடக்கு கடல்களில் பரீட்சார்த்த முயற்சியாக முதற் கட்டமாக 10 படகுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் குறித்த படகுகளை ஏற்றுமதி செய்யும் திட்டங்களும் இருப்பதனால் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

நோர்வே அரசாங்கத்தின் குறித்த திட்டத்தினை வரவேற்ற கௌரவ அமைச்சர் டகளஸ் தேவானந்தா  குறித்த திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post