போதைப்பொருளை ஒழித்து நல்லதோர் சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் - Yarl Voice போதைப்பொருளை ஒழித்து நல்லதோர் சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் - Yarl Voice

போதைப்பொருளை ஒழித்து நல்லதோர் சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - கூட்டமைப்பு எம்.பி சரவணபவன்


போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அதனுடாக மக்களின் வாழ்வை வளப்படுத்தி சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியுமென்றார்.

சர்வதேச நல்லொழுக்ல தினத்தை முன்னிட்டு வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் நடாத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் போதைப்பொருள் பாவனை அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் எனும்; மாலுசந்தி பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகள்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே சரவனபவன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலும் தெரிவித்ததாவது..

வடமாகணத்தில போதை சம்பவம்; இன்று ஆரம்பித்தது அல்ல. விடுதலை புலிகள் காலத்திலும் இருந்தது. அப்போது றொட்றிக் கழகத்தில் நான் இருந்த போது தெரு நாடகம் மூலமும் துண்டுப்  பிரசுரம் அடிச்சு கொடுத்தும் தான் விழிப்புணர்வு  நடந்தது.

நான் இலங்கை பொதைப்பொருள்  நிறுவனத்தில் அங்கத்துவராக நீண்ட காலமாக இருக்கிறேன். நான் இதை பற்றி நன்கு அறிந்திருக்கின்றேன்.

வடமாகாணம் இன்று மிக குறைந்த பொருளாதாரத்தை திரைசேரிக்கு ஈட்டிக் கொடுக்கிறது என்று ஜனாதிபதி தெரிவிக்கின்றார். ஆகவே போதைப் பொருளை ஒழிக்க வேண்டும். அதனூடாக பொருளாதாரம் மேம்பட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post