தனி நாட்டை உருவாக்கும் நித்தியானந்தா - Yarl Voice தனி நாட்டை உருவாக்கும் நித்தியானந்தா - Yarl Voice

தனி நாட்டை உருவாக்கும் நித்தியானந்தா


சாமியார் நித்யானந்தா தனிக்கொடி தனி கடவுச் சீட்டு என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்பட்டு வருகின்றன.

குழந்தைகள் கடத்தல் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வருகிறார்.

நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா 'கைலாஷ்' என்ற பெயரில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற நாடுகள் அற்ற சுத்த இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசேஞ்சரில் உரையாடிய நித்யானந்தா வத்திக்கான் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post