யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் படைத்த சாதனை - Yarl Voice யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் படைத்த சாதனை - Yarl Voice

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் படைத்த சாதனை


வெளியாகியுள்ள 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் கணிதம் உயிரியல் வர்த்தகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்துள்ளனர்.

கணிதம் உயிரியல் வர்த்தகம் ஆகிய துறைகளில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் கணிதப்பிரிவில் ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தினையும் தேசிய ரீதயில் 12ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

உயிரியல் பிரிவில் கிருசிகன் ஜெயனாந்தராசா எனும் மாணவன் 3ஏ சித்திகளைப்பெற்று யாழ்.மாவட்டத்தில் 1ஆம் இடத்தினையும் தேசிய ரீதியில் இரண்டாவது இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை வர்த்தக துறையில் சிவானந்தம் ரகுராஸ் எனும் மாணவன் 3ஏ சித்திகளைப்பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 107ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்...

0/Post a Comment/Comments

Previous Post Next Post