யாழ். பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக தபோதரன் நியமனம் - Yarl Voice யாழ். பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக தபோதரன் நியமனம் - Yarl Voice

யாழ். பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக தபோதரன் நியமனம்


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை மருத்துவ விஞ்ஞான பீடத்துக்கு பதில் பீடாதிபதியாக கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உடனடியாகச் செயற்பாட்டுக்கு வரும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுவரை காலமும் மருத்துவ பீடத்தின் கீழ் அலகாக இயங்கிவந்த துணை மருத்துவ விஞ்ஞான அலகு நகர திட்டமிடல்இ நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைசர் ரவூப் ஹகடகீமினால் சிறப்பு வர்த்தமானி மூலமாக கடந்த மாதம் முதல் துணை மருத்துவ விஞ்ஞான பீடமாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தது. இதன் மூலம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பன்னிரெண்டாவது பீடமாக துணை மருத்துவ விஞ்ஞான பீடம் உருவாகிறது. 


துணை மருத்துவ அலகின் இணைப்பாளராக பதவி வகித்த முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசட்ணத்தின் பெயர் பதில் பீடாதிபதிக்காக பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் தன்னால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியாது என பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மறுத்ததன் காரணமாக மூப்பின் அடிப்படையில் கலாநிதி தெ. தபோதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் பட்டமளிப்பு விழா நெருங்கிவரும் நிலையில் - பட்டமளிப்பு விழாவில் பீடாதிபதிகள் முன்னிலையாக வேண்டி காரணத்துக்காக பேரவைக்கு அங்கீகாரமின்றி மிக அவசரமாக இந்த நியமனம் வழங்கப்படுகிறது. துணை மருத்துவ விஞ்ஞான பீட வட்டாரங்கள் தெரிவித்தன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post