மாற்று அணி குறித்து சுமந்திரனுக்கு அச்சம், ஒற்றுமையைக் குலைத்தவர்களே ஐக்கியம் குறித்து பேசுவது வேடிக்கை - சுரேஸ் - Yarl Voice மாற்று அணி குறித்து சுமந்திரனுக்கு அச்சம், ஒற்றுமையைக் குலைத்தவர்களே ஐக்கியம் குறித்து பேசுவது வேடிக்கை - சுரேஸ் - Yarl Voice

மாற்று அணி குறித்து சுமந்திரனுக்கு அச்சம், ஒற்றுமையைக் குலைத்தவர்களே ஐக்கியம் குறித்து பேசுவது வேடிக்கை - சுரேஸ்


தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைப்பட வேண்டுமென்று பேசுகின்ற சுமந்திரன் போன்றவர்களோ கூட்டமைப்பில் இருந்த கட்சியில் வெளியேறுவதற்கு பிரதான காரணகர்தாக்களாக இருந்திருக்கின்றனர். கூட்டமைப்பில் எந்தவிதமான அமைப்பு முறையும் இல்லாமல் சர்வாதிகாரப் போக்கில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியை நிலைநிறுத்துகின்ற வகையிலையே கூட்டமைப்பை பயன்படுத்தி வந்தார்கள். அவ்வாறானவர்கள் இன்றைக்கு ஐக்கியம் என்று பேசுவது வெறுமனெ வாயளவில் மாத்திரமே தவிர உண்மையான ஐக்கியத்திற்காக அல்ல.

மேற்கண்டவாறு தெரிவித்திருக்குமு; ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமா சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்றைக்கு மாற்று அணி தேவையில்லை. அதற்கு வெற்றி கிட்டாது என்றெல்லாம் சுமந்திரன் கூறுகின்றதைப் பார்த்தால் மாற்று அணி குறித்தான அச்சம் அவருக்கு ஏற்பட்டிருக்கின்றதாகத் தான் பார்க்கிறோம். இன்றைய நிலைமையில் மாற்றுத் தலைமை என்பது தேவை என்ற அடிப்படையில் அது உருவாக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அது வெற்றியளிக்கும் என்றார்.

கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணி தேவையில்லை என்றும் மாற்று அணி ஒரு சவால் இல்லை என்றும் அவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமை வேண்டுமென்பது கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அது தொடர்பாகப் பேசப்பட்டு வருகிறது. துமிழ் மக்கள் ஒரு ஐக்கியத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தார்கள்.

 ஆனால் கூட்டமைப்பு மக்களிடமிருந்த பெற்றுக் கொண்ட ஆணையைக் கைவிட்டு அரசாங்கத்தைப் பாதுகாப்பதையே தங்களது முதன்மையான செயற்பாடாகக் கருதி செயற்பட்டு வந்தார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திற்கு பிரச்சனைகள் வந்த பொழுதும் அரசாங்கம் கவிழுகின்ற சூழ்நிலைகள் வந்த பொழுது அரசாங்கத்தை பாதுகாப்பதில் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்தார்கள்.

ஆனால் தமிழ் மக்களினுடைய அரசியல் ரீதியிலான தேசிய இனப் பிரச்சனைக்குரிய தீர்வு என்பதற்கப்பலர் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய ஏனைய பிரச்சனைகளைக் கூட தீர்ப்பதற்கு இவர்கள் தவறிவிட்டார்கள்.
அதனால் இன்றும் கூட போராட்டங்கள் தொடர்ந்து நடக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலையில் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஏற்ற ஒரு மாற்றுத் தலைமை வேண்டும் என்பது மக்களால் வலியுறுத்தப்பட்ட விசயமாக மாறிவிட்டது. இதன் காரணமாகத் தான் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஏறத்தாழ 64 வீதமான வாக்குகளை அவர்கள் இழந்திருக்கிறார்கள் என்பதை சுமந்திரன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

சுமந்திரனோ சம்மந்தன் அவர்களோ ஏnனையோரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது தங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு செல்வாக்கு இருக்கிறதென்பதைக் காட்டுவதற்காகவோ ஒரு மாற்று அணி என்பது தங்களுக்கு சவால் இல்லை என்று அவர்கள் வாதிடலாம்.

 ஆனாலும் கூட கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய மாவை சேனாதிராசா, சித்தார்த்தன் போன்றோர் அவர்களது கூட்டத்திலேயே தங்களுக்கு நெருக்கடிகள் இரப்பதாகவும் முன்னர் போன்று வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாதென்பதையும் அவர்கள் சம்மந்தனிடம் கூறியதாக ஊடகச் செய்திகளும் வெளிவந்திருக்கின்றன.

ஆகவே அந்த வகையில் மாற்று அணி என்பது வெறுமனே அவர்களுக்கு ஒரு சவால் மாத்திரம் என்று நான் சொல்ல மாட்டன். மாற்று அணி என்பது தமிழ் மக்களுக்குத் தேவையானதாக இருக்கிறது. நிச்சயமாக அவர்கள் அடுத்து வரக் கூடிய பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களில் அவர்கள் முழுமையான வெற்றியை அடைவார்கள்.

அந்த அளவிற்கு வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு தொடர்பான மிகப் பாரிய விமர்சனங்கள் ஏற்பட்டிருக்கிறது. புததிஐpவிகளோ கல்விமான்களோ சாதாரண மக்களொ கூட அவர்களை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. அந்தவிற்கு இவர்களது செயற்பாடுகளில் விமர்சனங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அண்மையில் நடந்த ஐனாதிபதி தேர்தல் என்பது அது ஏற்கனவே கோத்தபாய ராஐபக்ச என்பவர் முன்னர் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் என்பதால் அவர் காலத்தில் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட சோதனைகளுக்கு உட்பட்டதன் காரணமாக பல்வேறுபட்ட அச்சங்கள் காரணமாக வாழ்ந்ததன் காரணமாக அவ்வாறான ஒருவர் மிண்டும் வருவாராக இருந்தால் தங்களுக்கு அதே நிலை மிண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டதன் காரணமாகத் தான் எதிர்த்தரப்பில் இருந்த சஐpத் பிரேமதாசாவிற்கு வாக்களித்தார்களே தவிர அந்த வாக்குகள் ஏதோ கூட்டமைப்பின் சம்மந்தனோ சுமந்திரனோ கேட்டக் கொண்டதற்காக விழுந்த வாக்கென்று அவர்கள் கருதுவார்களாக இருந்தால் மிகப் பெரிய தவறு விடுவிக்னறார்கள் என்பது தான் அர்த்தமாகும்.

ஆகவே ஒரு மாற்று அணி என்பது மக்களுக்குத் தேவை மாற்று அணி என்பது ஏற்கனவே என்னைப் பொறுத்தவரையில் உதயமாகி விட்டது. ஆகவே மாற்று அணி அல்லது மாற்றுத் தலைமை என்பது மக்களுக்கு தேவையான விசயமாக இன்று மாறியிருக்கின்றது. நிச்சயமாக அந்த மாற்றுத் தலைமை என்பது தமிழ் மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவுடன் அது வெற்றி பெறுமென்று தான் நான் எதிர்பார்க்கின்றேன்.

இதே வேளையில் ஏற்னவெ நடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் சரி மக்கள் மாற்றுத் தலைமை தேவை என்பதை தீர்மானகரமாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள். ஆக சுமந்திரன் பேச்சாளர் என்ற அடிப்படையில் அவருடைய செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன என்ற அடிப்படையில் அவர் தனது வாயில் வரக் கூடிய விசயங்களைப் பேசலாம்.

அது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறலாம், மாற்று அணி தேவையில்லை என்று சொல்லலாம். அதில் அவருடைய ஒரு கருத்தை நீங்கள் பார்த்தீர்களானால் இது ஒரு மாற்று அணிக்கான அல்லது ஒரு மாற்றுத் தலைமைக்கான பரீட்சார்த்தக் களமாக வரக்கூடிய தேர்தலைப் பாவிக்க கூடாது என்று அவர் என் அவ்வளவு தூரம் கூறுகின்றார். உண்மையில் மாற்று அணி தொடர்பாக அவருக்கு அச்சம் ஏற்படுவதன் காரணமாகத் தான் அவர் அந்தக் கருத்தினைக் கூறியிருக்கின்றார்.

அதாவது இன்னுமொரு அணி வந்தால் அது தங்களுக்கு ஒரு பிரச்சனைக்குரிய விசயம் எனப்தால் அந்த மாற்று அணியென்பதை உருவாகிவிடக் கூடாதென்ற தோரணையில் தான் அவரது பேச்சுக்கள் அமைந்திருக்கிறது. ஆகவே அவர்களைப் பொறுத்தவரையில் அதாவது கூட்டமைப்பை பொறுத்தவரையில் முக்கியமாக சம்மந்தர் சுமந்திரனைப் போன்றவர்கள் வாயளவில் ஐக்கிய பெசுபவர்களாக மாத்திரம் தான் இருக்கின்றார்கள்.

 கூட்டபை;பில் இருந்த பல அமைப்புக்கள் வெளியெ போனதற்கு முக்கிய காரண கர்த்தாக்களாக இவர்கள் தான் இருந்திருக்கிறார்கள். இவர்கள் எந்தவிதமான அமைப்பு முறையும் இல்லாமல் சர்வாதிகாரமான போக்கில் செயற்பட்டதுடன் தமிழரசுக் கட்சியை நிலைநிறுத்துகின்ற ஒரு போக்கில் தான் கூட்டமைப்பை அவர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.

ஆகவே அந்த வகையில் இவர்களுடைய ஐக்கியம் என்ற பேச்சு என்பது வாயளவில் மாத்திரமே தவிர ஒட்டுமொத்தமான தமிழ் அமைப்புக்களை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களினுடைய சரியான நியாயமான கொரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஒரு அமைப்பு முறையாக அது இல்லை என்பது தான் உண்மை.

ஆகவெ சுமந்திரன் அடிக்கடி ஊடகங்களுக்கு சொல்வது போன்று மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று சொல்வதோ அல்லது இது வெற்றியடையாது என்று சொல்வதோ இன்றைய காலகட்டத்தில் தேவையில்லை என்றும் சொல்வதெல்லாம் அவர் தனது சொந்தக் கருத்தை வெளியிட்டு வருகிறாரே தவிர நிச்சயமாக நிலைமைகள் என்பது அவ்வாறு அல்ல.

நான் ஏற்கனவே கூறியது போன்று மேல் மட்டத்திலும் சரி கீழ் மட்டத்திலும் சரி நிச்சயமாக ஒரு மாற்றுத் தலைமை என்பது தேவை என்ற நிலவரம் இருக்கிறது. அந்த வகையில் அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் என்பது சுமந்திரனுடைய பல்வேறுபட்ட கருத்துக்களுக்கான பதிலாக அமையுமென்று திட்டவட்டமாக நான் நம்புகின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post